ரயில்வே வருவாய் 20 % அதிகரிப்பு!

வியாழன், 18 செப்டம்பர் 2008 (20:11 IST)
சர‌க்கு‌பபோ‌க்குவர‌த்தமூல‌மர‌யி‌ல்வவருவா‌ய் 20 சத‌வீத‌மஅ‌திக‌ரி‌த்து‌ள்ளதஎ‌ன்றம‌த்‌திஅரசதெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

ரயில்வே துறையில் கடந்த ஆண்டு ஏப்ரல் - ஆகஸ்ட் வரையிலான ஐந்தமாதங்களில் சரக்குப் போக்குவரத்து மூலமாக ரூ.17,943.23 கோடி வருவாய் கிடைத்தது. இந்த ஆண்டின் அதே ஐந்து மாதங்களில் சரக்கு போக்குவரத்து மூலமாக கிடைத்த வருவாய் ரூ.21,499.66 கோடியாக அதிகரித்துள்ளது. இது 19.82 சதவீதம் அதிகம். கடந்த ஆண்டில் 30.93 கோடி டன் சரக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இந்த ஆண்டில் இது 8.62 சதவீதம் உயர்ந்து 33.6 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.

2008-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நிலக்கரியை கொண்டு சென்றதன் மூலமாக அதிகபட்சமாக ரூ.1,373.77 கோடி வருமானம் கிடைத்துள்ளது.

இரும்புத் தாது மூலமாக ரூ.818.83 கோடி, சிமெண்ட் - ரூ.303.64 கோடி, உரம் - ரூ.264.48 கோடி, உணவு தானியங்கள் - ரூ.258.69 கோடி, பெட்ரோலியம் ஆயில் மற்றும் உயவு எண்ணெய் - ரூ.252.41 கோடி, இரும்பு எஃகு - ரூ.235.88 கோடி, இரும்பு தொழிலுக்கான மூலப் பொருட்கள் - ரூ.67.97 கோடி, சரக்குப் பெட்டகங்கள் - ரூ.195.80 கோடி, இதர பொருட்கள் மூலம் ரூ.286.10 கோடி வருமானம் கிடைத்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்