சந்திராயன்-1 ஆய்வுக்கலத்தை இன்று அறிமுகப்படுத்துகிறது இஸ்ரோ!

வியாழன், 18 செப்டம்பர் 2008 (16:25 IST)
சந்திரனை ஆய்வு செய்வதற்காக இந்தியா தயாரித்துள்ள ஆளில்லா விண்கலமான சந்திராயன்-1 ஆய்வுக் கலத்தை இன்று அறிமுகப்படுத்த இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம் (இஸ்ரோ- ISRO) முடிவு செய்துள்ளது.

பி.எஸ்.எல்.வி ராக்கெட் உதவியுடன் (Polar Satellite Launch Vehicle- PSLV) விண்ணில் செலுத்தப்பட உள்ள சந்திராயன்-1 ஆய்வுக்கலம் நிலவின் சுற்றுப்புறத்தை ஆய்வு செய்வதுடன், நிலவில் இறங்கி மண்ணின் மாதிரிகள், புகைப்படங்களை எடுக்கும் திறன் மிக்கது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

மொத்தம் 2 ஆண்டுகள் சந்திரனை ஆய்வு செய்வதற்காக 83 மில்லியன் டாலர் செலவில் சந்திராயன்-1 ஆய்வுக்கலத்தை இஸ்ரோ உருவாக்கியுள்ளது. இதன் எடை 590 கிலோ என்றும், சந்திராயனுடன் நாசாவுக்கு தேவையான சில உபகரணங்களும் பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலமாக விண்ணுக்கு அனுப்பப்படுகிறது என்றும் இஸ்ரோ தகவல்கள் கூறுகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்