இந்த மாத இறுதியில் பிரதமர் மன்மோகன் சிங், அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் செல்ல உள்ளார். நியூயார்க்கில் ஐ.நா. பொதுசபைக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு ஒரு நாள் பயணமாக வாஷிங்டன் செல்கிறார். அங்கு ஜார்ஜ் புஷ்-ஐச் சந்திக்கும் அவர், அணுசக்தி ஒப்பந்தத்தின் இறுதி கட்ட நடவடிக்கை குறித்து விவாதிப்பார் என்று கருதப்படுகிறது.
பிரதமர் வாஷிங்டன் செல்லமுடியாவிடில், அயலுறவு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியும், அமெரிக்க அயலுறவு துறை அமைச்சர் காண்டலீஸா ரைஸ்-உம் ஒப்பந்தத்தின் இறுதி நடவடிக்கைகளை மேற்கொள்வர்.
அமெரிக்கப் பயணத்துக்குப் பிறகு பிரான்ஸ் செல்லும் பிரதமர், இந்திய -ஐரோப்பிய யூனியன் வருடாந்திர மாநாட்டில் பங்கேற்கிறார். அதன் பிறகு பாரீஸ் சென்று பிரான்ஸ் அதிபர் நிகோலஸ் சர்கோஸியை சந்திக்கிறார்.