நர்மதா ஆற்றில் ஜீப் கவிழ்ந்து 11 பேர் பலி!

சனி, 6 செப்டம்பர் 2008 (15:38 IST)
மத்திய பிரதேசத்தினமேற்கு பகுதியில் உள்ள பத்வா பகுதியில் பாயும் நர்மதா ஆற்றில் ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 11 பேர் உயிரிழந்தனர்.

விபத்துப் பகுதியில் இருந்த ஜீப்பில் இருந்து 8 உடல்கள் மீட்கப்பட்டதாகவும், மேலும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 3 உடல்கள் அங்கிருந்து மூன்று கி.மீ தொலையில் கைப்பற்றப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பலியானவர்கள் அனைவரும் அம்மாநிலத்தின் பமன்புரி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், நர்மதா ஆற்றுக்கு மறுபுறம் உள்ள அஞ்சாருட் கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டுத் திரும்பிக் அதிகாலையில் கொண்டிருந்த போது விபத்தில் சிக்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்