தேசிய கப்பல் வாரியத்தி‌ற்கு‌ப் பு‌‌திய தலைவ‌ர்!

புதன், 3 செப்டம்பர் 2008 (19:00 IST)
தேசிய கப்பல் வாரியத்தின் தலைவராக இவ்வாரியத்தின் மூத்த உறுப்பினரான கேப்டன் பி.ி.கே மோகன் நிய‌மி‌க்க‌ப்ப‌ட்டுள்ளார். இவர் இரண்டாண்டுகளுக்கு இ‌ந்த‌பபதவியில் இருப்பார்.

தே‌சிய‌கக‌ப்‌ப‌லவாரியத்தில் மக்களவையின் நான்கு உறுப்பினர்களும், மாநிலங்களவையின் இரண்டு உறுப்பினர்களும், தொழில்நுட்ப வல்லுனர்கள் சிலரும் இடம் பெற்றிருப்பார்கள்.

வர்த்தக கப்பல் சட்டத்தின் கீழ் 1959-ல் தேசிய கப்பல் வாரியம் முதன் முதலில் உருவாக்கப்பட்டது. மறைந்த ஜி.எல்.மேத்தா, சி.எச்.பாட்டியா, சி.எம்.ஸ்டீபன் போன்ற பிரபலங்கள் இந்த வாரியத்திற்கு தலைமை வகித்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமின்றி, தொழிற் சங்கங்கள், கப்பல் உரிமையாளர்கள் ஆகியவைகளின் பிரதிநிதிகளும், கப்பல் துறையின் தலைமை இயக்குனர், பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் வர்த்தக அமைச்சக பிரதிநிதிகள் ஆகியோரும் தேசிய கப்பல் வாரியத்தில் உறுப்பினர்களாக உள்ளார்கள்.

கப்பல் கட்டும் துறையின் சார்பாக, கொச்சி கப்பல் கட்டும் தளத்தின் தலைவரும் மேலாண்மை இயக்குனருமான எம்.ஜித்தேந்திரன், துறைமுக துறையின் சார்பாக எண்ணூர் துறைமுகத்தின் தலைவர் எஸ்.வேலுமணி, கடல்சார் கல்வித் துறை சார்பாக தேசிய கடல்சார் அகாடமியின் இயக்குனர் டாக்டர் விஜயன், பிரபல விஞ்ஞானி பேராசிரியர் ராமசுவாமி ஆகியோரும் இந்த வாரியத்தின் உறுப்பினர்களாக இருக்கின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்