ராஜஸ்தான்: சிமி இயக்கத்தினர் நால்வர் கைது!

செவ்வாய், 2 செப்டம்பர் 2008 (12:09 IST)
தடை செய்யப்பட்ட சிமி இயக்கத்தைச் சேர்ந்த நான்கு பேரை ராஜஸ்தான் மாநில சிறப்பு அதிரடிப்படைக்குழு (S.O.G.) கைது செய்துள்ளது.

இதுகுறித்து கூடுதல் டி.ஜி.பி. (குற்றப்பிரிவு) ஏ.கே.ஜெயின் ஜெய்பூரில் இன்று அளித்த பேட்டியில், இவர்கள் நால்வரும் நேற்று கைது செய்யப்பட்டதாகவும், சிமி (SIMI) இயக்கத்தின் முக்கியக்குழு ஒன்றின் தலைவர் முன்வார் ஹுசைனும் இதில் ஒருவர் என்றும் கூறினார்.

ராஜஸ்தானில் உள்ள கோட்டா என்ற இடத்தில் ஹுசைன் தையற்கடை நடத்தி வந்ததாகக் கூறிய டி.ஜி.பி. ஜெயின், கைதாகியுள்ள மற்றவர்கள் கோட்டாவைச் சேர்ந்த அதிக் என்கிற அது- உர் ரெஹ்மான், நதீம் அக்தர், பரன் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது இலியாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகச் சொன்னார்.

சிமி இயக்கத்தினர் நான்கு பேரும் உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 11 நாள் போலீஸ் காவலில் வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.

கைதானவர்களுக்கும், ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று கூறப்படுகிறது. சிமி இயக்கத்தோடு தொடர்பு வைத்திருந்ததற்காக இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்