ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சாலைப் பாலம் ஒன்றில் தீவிரவாதிகள் வைத்திருந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டை மத்திய கூடுதல் காவற்படையினர் கண்டுபிடித்து அகற்றினர்.
ஐ.ஈ.டி. என்றழைக்கப்படும் இந்த அதி நவீன சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்திருந்தால் பெரும் சேதம் ஏற்பட்டிருக்கும் என்று கூறிய மத்திய கூடுதல் காவற்படையின் பேச்சாளர், ஸ்ரீ நகரில் இருந்து 55 கி.மீ. தூரத்தில், பண்டிபுரா மாவட்டத்திலுள்ள கனுசா பாலத்தில் அந்தக் குண்டு மறைத்து வைக்ககப்பட்டிருந்ததாகக் கூறினார்.
ம.கூ.கா.படையின் 177வது படைப்பிரிவு, கற்களுக்கு இடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த வெடிகுண்டை கைப்பற்றி அகற்றியதாகக் கூறினார்.