2 லட்சம் கிராமங்களில் செல்பேசி சேவை திட்டம்-2!
புதன், 27 ஆகஸ்ட் 2008 (18:33 IST)
சுமார் 2 லட்சம் கிராமப்புற பகுதிகளில் செல்பேசி சேவையை விரிவுபடுத்தும் இரண்டாவது திட்டத்தை மத்திய தொலைத் தொடர்புத் துறை விரைவில் துவக்க உள்ளது.
இதன் மூலம் 500 பேர் வசிக்கும் அனைத்து கிராமங்களுக்கும் செல்பேசி சேவை அளிக்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் கூடுதலாக 11,000 கோபுரங்கள் (Towers) நிறுவப்படவுள்ளன. இத்திட்டத்திற்கான விவரங்கள் சேகரிக்கப்பட்டு கோபுரங்கள் அமைப்பதற்கான இடங்களும் கண்டறியப்பட்டுள்ளன. இப்பணி ஒன்றரை ஆண்டு காலத்திற்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திட்டத்தின் முதலாவது கட்டத்தில் சுமார் 7,900 கோபுரங்கள் (Towers) நாடெங்கும் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களில் 371 டவர்கள் நிறுவப்பட்டு வருகின்றன.