மங்களூர் அருகே உள்ள பல்குனி ஆற்றில் பள்ளிப் பேருந்து கவிழ்ந்து விழுந்ததில், அதில் பயணித்த 7 குழந்தைகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.
இன்று காலை இவ்விபத்து நடந்த சமயத்தில், பேருந்தில் 30 குழந்தைகள் இருந்திருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்து குறித்து தகவலறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக சென்று 14 குழந்தைகளை உயிருடன் மீட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். எனினும் பலி எண்ணிக்கை மேலும் உயரக் கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.