ம‌க்களவை கூ‌ட்‌ட‌ம் துவ‌ங்‌கியது!

திங்கள், 21 ஜூலை 2008 (13:45 IST)
பரபரப்பான சூழ்நிலையில் ம‌க்களவை‌யி‌ன் 2 நாளசிறப்புக் கூட்டம் தொடங்கியது. முக்கிய தலைவர்கள் அனைவரும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

ம‌க்களவை‌த் தலைவ‌ர் சோம்நாத் சட்டர்ஜி உத்தரவுப்படி நேரடியாக நம்பிக்கைத் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. "அமைச்சரவையின் மீது இந்த அவை நம்பிக்கை வைத்துள்ளது'' என்ற ஒற்றை வரி நம்பிக்கைத் தீர்மானத்தை பிரதமர் மன்மோகன் சிங் தாக்கல் செய்தார்.

இந்த தீர்மானத்தின் மீது விவாதத்தை பிரதமர் மன்மோகன் சிங் தொடங்கி வைத்து முதலில் பேசினார். அமெரிக்காவுடனான அணு சக்தி ஒப்பந்தம் இந்தியாவுக்கு ஏன் தேவை என்பதை பற்றியும், அவர் விளக்கம் அளித்தார்.

தொடர்ந்து விவாதம் நடந்தது. நாளையும் அரசியல் கட்சித் தலைவர்கள் விவாதத்தில் பங்கேற்று பேசுவார்கள். முடிவில் பிரதமர் மன்மோகன் சிங் பதில் அளித்து பேசுவார். நாளை பிற்பகல் நம்பிக்கைத் தீர்மானத்தின் மீது வா‌க்கெடுப்பு நடைபெறும்.

வெப்துனியாவைப் படிக்கவும்