மகாராஷ்டிர ஆளுநராக எஸ்.சி. ஜமீர் பதவியேற்றார்!

சனி, 19 ஜூலை 2008 (11:33 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்எஸ்.சி.ஜமீர், இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி ஸ்வதேந்தர் குமார், பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

ராஜ்பவனில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில், முதல் அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக், மாநில அமைச்சர்கள், உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மகாராஷ்டிரா ஆளுநராக இருந்த எஸ்.எம்.கிருஷ்ணா பதவி விலகியதைத் தொடர்ந்து, கோவா ஆளுநராக கடந்த 4 ஆண்டுகளாக பதவி வகித்த ஜமீர், மகாராஷ்டிரா மாநில ஆளுநர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வந்தார்.

இதற்கிடையில், கோவா ஆளுநராக ஷிவிந்தர் சிங் சித்து நியமிக்கபட்டதைத் தொடர்ந்து, அப்பொறுப்பில் இருந்து ஜமீர் விடுவிக்கப்பட்டு, மகாராஷ்டிரா ஆளுநராகியுள்ளார்.

கடந்த 8ஆம் தேதி மகாராஷ்டிரா ஆளுநராக நியமிக்கப்பட்ட ஜமீர், இன்று அதிகாரப்பூர்வமாக பதவியேற்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்