தாயகம் திரும்பினார் பிரதமர் மன்மோகன் சிங்

வியாழன், 10 ஜூலை 2008 (11:59 IST)
ஜப்பானில் 3 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மன்மோகன் சிங் நேற்று நள்ளிரவில் புதுடெல்லி திரும்பினார்.

ஜி-8 நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர், அதன் பின்னணியில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ்ஷையும் சந்தித்துப் பேசினார்.

அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றுவது பற்றியும் பிரதமர் பேசியிருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டோக்கியோவில் பிரதமர் இருந்த போது ரஷ்யா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் நாடுகளின் தலைவர்களையும் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சு நடத்தினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்