முன்னதாக, புது டெல்லியில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழுக் கூட்டத்தில், அணு சக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்குமானால் அரசிற்கு அளித்துவரும் ஆதரவை விலக்கிக் கொள்வது என்று முடிவெடுக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பிரதமர் மன்மோகன் சிங், "இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துதற்கு முன் பன்னாட்டு அணு சக்தி முகமையுடனும், அணு சக்தி வணிகக் குழுவுடன் பேச்சு நடத்தி இறுதி முடிவு எடுக்க அரசை அனுமதிக்க வேண்டும். அது முடிந்த பிறகு நாடாளுமன்றத்திற்கு கொண்டுவருவேன். அப்போது நாடாளுமன்றம் எடுக்கும் முடிவிற்கு கட்டுப்படுவோம்” என்றார்.