விமான பெட்ரோல் விலையை பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனங்கள் 4.3 விழுக்காடு குறைத்துள்ளன.
மத்திய அரசு நேற்று அந்நிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் விமான பெட்ரோல் மீதான இறக்குமதி வரியை 10 விழுக்காட்டில் இருந்து 5 விழுக்காடாக குறைத்தது.
இதனால் பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனங்கள் ஏ.டி.எப் (aviation turbine fuel) எனப்படும் விமானங்களுக்கான பெட்ரோல் விலையை குறைத்துள்ளன.
இதனால் விமான பெட்ரோல் விலை டில்லியில் கிலோ (1,000) லிட்டருக்கு ரூ.66,226.66 ஆகவும், மும்பையில் ரூ.68,626.87 ஆக இருக்கும் என்று இந்தியன் ஆயில் நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
விமான பெட்ரோல் விலையேற்றத்தையடுத்து விமான நிறுவனங்கள் பயணக் கட்டணத்தின் மீது எரிபொருள் கூடுதல் வரியை விதித்தன. தற்பொழுது விலை குறைக்கப்பட்டுள்ளதால் அது குறைக்கப்படும்.