எ‌ன்னை இளவரச‌ர் எ‌ன்று அழை‌க்க வே‌‌ண்டா‌ம்: ராகு‌ல் கா‌ந்த‌ி!

ஞாயிறு, 27 ஏப்ரல் 2008 (12:50 IST)
நான் இளவரச‌ர் அல்ல; என்னை இனி யாரு‌ம் அ‌வ்வாறு அழைக்க வேண்டாம் என காங்கிரஸ் கட்சி பொதுச் செயலர் ராகுல் காந்தி வே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் ஒருவரை யுவராஜ் (இளவரசர்) என்று அழைப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்றே தோன்றுகிறது என்று கூறினார் ராகு‌ல்.

இந்த பிரச்னைக்குப் பிறகு உத்தரப்பிரதேச முதல்வர் மாயாவதி, ராகுல் காந்தியை யுவராஜ் என்று கிண்டல் செய்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.

சில மூத்த தலைவர்கள் பிரதமர் பதவிக்கு தான் தகுதியானவர் என கூறியது குறித்து கேட்கிறீர்கள், "என்னைப் பொருத்தவரை மன்மோகன் சிறந்த நிர்வாகி. நான் அவரைத்தான் ஆதரிக்கிறேன். நான் அவருக்கு எப்போதுமே பின்புலமாக இருப்பேன்'' என்றார்.

உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் உள்ள பழங்குடியின மக்கள் வீடுகளுக்குச் சென்று திரும்பிய உடன் ராகுல் காந்தி விசேஷ சோப் போட்டு குளித்ததாக மாயாவதி கூறினார். ராகுல் தில்லி திரும்பியதும் அவரது வீட்டில் சில சடங்குகள் நிறைவேற்றப்பட்டதாக மாயாவதி குற்றம் சாட்டினார். தனது கசங்கிய ஆடைகளைக் காண்பித்து இது எந்த அளவுக்கு உண்மையாக இருக்க முடியும். தான் எந்த விசேஷ சோப்பையும் பயன்படுத்துவது கிடையாது என்று ராகுல் கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்