கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. சார்பில் ஏழு வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்று அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் மே 10-ஆம் தேதி துவங்கி மூன்று கட்டங்களாக நடக்கவுள்ள சட்டப் பேரவைத் தேர்தல்களில் அ.இ.அ.தி.மு.க. மாநிலச் செயலர் கே.ஆர். கிருஷ்ணராஜ் காந்திநகர் தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநில துணைச் செயலர் எம்.சி. தெய்வசகாயம்- சாம்ராஜ் பேட்டை.
மாநில இலக்கிய அணித் தலைவர் எஸ்.கே. ராமசாமி- ராஜாஜி நகர்.
மாநில முன்னாள் செயலர் வா. புகழேந்தி- சாந்தி நகர்.
கோலார் தங்கவயல் அ.இ.அ.தி.மு.க. செயலர் ஏ. ஆனந்தராஜ்- கோலார் தங்க வயல்.
எலஹங்கா தொகுதி அ.இ.அ.தி.மு.க. செயலர் டி. சாம்ராஜ் (எ) அன்பரசன் -புலிகேசி நகர் (தனி).
கே. மூர்த்தி- சிவாஜி நகர். என்றவாறு போட்டியிட உள்ளனர்.
கர்நாடகத்தில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து அ.இ.அ.தி.மு.க. போட்டியிடும் என்ற எதிர்பார்ப்பு இருந்த போதிலும், தனிப்பட்ட முறையில் வேட்பாளர்களை அ.இ.அ.தி.மு.க. அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.