பி.எஃப் மோசடி: ம.பு.க. சோதனை!

செவ்வாய், 8 ஏப்ரல் 2008 (17:58 IST)
மும்பையைச் சேர்நத ஹிரான்தானி குழுமத்தைச் சேர்ந்த எட்டு நிறுவனங்களில் இன்று மத்திய புலனாய்வு‌கழக‌ம் (சி.பி.ஐ.) அதிரடி சோதனை நடத்தியது.

மும்பையில் புகழ் பெற்ற கட்டுமான நிறுவனம் ஹிரான்தானி. இது பொவாய் பகுதியில் பெரிய அளவில் குடியிருப்பு காலனிகளை கட்டியுள்ளது. அத்துடன் மருத்துவமனை உ‌ள்‌ளி‌ட்பல்வேறு தொழில்களையும் செய்து வருகிறது.

இந்நிறுவனத்தில் சோதனை நடத்தியதபற்றி ம.ு.க. அதிகாரிக‌ள் கூறுகை‌யி‌ல், "இ‌ந்நிறுவனம் தொழிலாளர்களிடம் இருந்து மாதா மாதம் பிடித்தம் செய்த பி.ஃப் எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ரூ.168 கோடியை அரசிடம் செலுத்தாமல் மோசடி செய்துள்ளதாக வந்த தகவலின் அடிப்படையில் சோதனை செய்யப்பட்டது.

ஹிரான்தானி சகோதரர்கள் பி.ஃப் பணத்தை அரசுக்கு செலுத்தவில்லை. அத்துடன் வேறு விதி மீறல்களில ஈடுபட்டு இருக்கின்றார்களா என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம்" எ‌ன்றன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்