த‌மிழக அர‌சி‌ன் முடி‌வி‌ற்கு எ‌ஸ்.எ‌ம்.‌கிரு‌ஷ்ணா வரவே‌ற்பு!

சனி, 5 ஏப்ரல் 2008 (19:05 IST)
க‌ர்நாடகா‌வி‌ல் பு‌திய அரசு அமை‌யு‌ம் வரை ஒகேன‌க்க‌ல் கூ‌ட்டு‌க் குடி‌நீ‌ர்‌த் ‌தி‌ட்ட‌‌த்தை ‌நிறு‌த்‌தி வை‌ப்பதாக த‌மிழக அரசு அ‌றி‌வி‌த்து‌ள்ளதை க‌ர்நாடக‌ மு‌ன்னா‌ள் முத‌ல்வ‌ர் எ‌ஸ்.எ‌ம்.‌கிரு‌ஷ்ணா வரவே‌ற்று‌ள்ளா‌ர்.

இது கு‌றி‌‌த்து அவ‌ர் பெ‌ங்களூரு‌வி‌ல் இ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் கூறுகை‌யி‌ல், "மா‌நில‌ங்களு‌க்கு இடை‌யிலான ‌விவகார‌ங்க‌‌ளி‌ல் எழு‌ம் ‌சி‌க்‌க‌ல்க‌ள் முறையான பே‌ச்சு‌க்க‌ளி‌ன் மூல‌ம் ‌தீ‌ர்‌க்க‌ப்பட வே‌ண்டு‌ம். கூ‌ட்டு‌க் குடி‌நீ‌ர்‌த் ‌தி‌ட்ட‌த்தை த‌மிழக முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி ‌நிறு‌த்‌தி வை‌த்‌திரு‌ப்பது ‌மிகவு‌ம் வரவே‌ற்க‌த்த‌க்கது" எ‌ன்றா‌ர்.

கூ‌ட்டு‌க் குடி‌நீ‌ர்‌த் ‌தி‌ட்ட‌ம் தொட‌ர்பாக முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி அ‌றி‌க்கை வெ‌ளி‌யி‌ட்டது‌‌ம் அவருட‌ன் ‌விவா‌தி‌த்தே‌ன் எ‌ன்று‌ கூ‌றிய எ‌‌ஸ்.எ‌‌ம்.‌கிரு‌ஷ்ணா, நடிக‌ர் ர‌ஜி‌னிகா‌ந்‌த் அவரை‌ப் ப‌ற்‌றி தெ‌ரி‌வி‌த்த கரு‌த்துகளு‌க்கு‌ப் ப‌தில‌ளி‌க்க மறு‌த்து ‌வி‌ட்டா‌ர்.

இதேபோல க‌ர்நாடக மு‌ன்னா‌ள் துணை முத‌ல்வ‌ர் ‌சீதாராமையாவு‌ம் கருணா‌நி‌தி‌யி‌ன் அ‌றி‌க்கையை வரவே‌ற்று‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்