பாதுகா‌ப்பு ‌விடய‌ங்க‌ளி‌ல் அமெ‌ரி‌க்காவுட‌ன் உறவு கூடாது: ‌பிரகா‌ஷ் கார‌த்!

ஞாயிறு, 30 மார்ச் 2008 (10:53 IST)
பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய விடயங்களில் அமெரிக்காவின் கொள்கைகளை இந்தியா தழுவிக் கொள்வதைத் தடுக்க மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் க‌ட்‌சி தொடர்ந்து போராடு‌ம் எ‌ன்று அ‌க்க‌ட்‌சி‌‌‌யி‌ன் பொது‌ச் செயல‌ர் ‌பிரகா‌ஷ் கார‌த் கூ‌றினா‌ர்.

மார்க்‌சி‌ஸ்‌ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 19-வது அகில இந்திய மாநாடு கோவையில் சனிக்கிழமை தொடங்கியது.

இதில் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத் பேசுகை‌யி‌ல்,"அமெரிக்காவுடன் இந்திய அரசு செய்து கொண்டுள்ள அணுசக்தி ஒப்பந்தத்தை செயல்படுத்தக் கூடாது என்று மார்க்‌சி‌ஸ்‌ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகள் ஏற்கெனவே வ‌லியுறு‌த்‌தியுள்ளன. நாடாளுமன்றத்தின் பெரும்பாலான உறுப்பினர்களின் கருத்தும் அதுவே ஆகு‌ம்.

இந்த எதிர்ப்போடு நமது பணி முடிந்து விடாது. பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய விடயங்களில் அமெரிக்காவின் கொள்கைகளை இந்தியா தழுவிக் கொள்வதைத் தடுக்க தொடர்ந்து போராட வேண்டும். இது இந்தியாவுக்கு மட்டுமல்ல. ஒட்டுமொத்த தெற்காசியாவுக்கும் பொருந்தும். அமெரிக்காவுடன் தாராளமயக் கொள்கையை இந்தியா கடைப்பிடிப்பதையும் எதிர்க்கிறோம்" எ‌ன்றா‌ர்.

"ஆளும் தரப்பின் கொள்கைகளை எதிர்த்து கடந்த மூன்று ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களையும், இயக்கங்களையும் நடத்தி உள்ளோம். வரும் நாள்களில் இதுபோன்ற போராட்டங்களை நடத்த மாநாட்டில் விவாதிக்கப்படும்.

தெற்காசியப் பகுதியில் அமெரிக்காவின் ஏகாதிபத்தியம் வளர்வதற்கு எதிராக போராட வேண்டும். இதற்கு, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், வங்கதேசம் போன்ற நாடுகளில் உள்ள முற்போக்கு மற்றும் ஜனநாயக சக்திகள் ஒன்று திரள வேண்டும்" எ‌ன்று‌ம் பிரகாஷ் காரத் கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்