இதுகுறித்து டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதிதாக ஒரிசா, மத்திய பிரதேசம் (இந்தூர்), குஜராத், பஞ்சாப் மாநிலங்களில் 4 ஐ.ஐ.டி. நிறுவனங்களும், தமிழ்நாடு, காஷ்மீர், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் (ராய்ப்பூர்), உத்தரகண்ட், ஹரியானா ஆகிய மாநிலங்களில் 6 ஐ.ஐ.எம். நிறுவனங்களும் அமைக்கப்படும்" என்றார்.
11-வது ஐந்தாண்டு திட்டத்தில் 8 ஐ.ஐ.டி. மற்றும் 7 ஐ.ஐ.எம். நிறுவனங்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதன்படி ஆந்திரம், ராஜஸ்தான், பிஹார், ஹிமாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஐ.ஐ.டி. நிறுவனங்களும், மேகாலய தலைநகர் ஷில்லாங்கில் ஐ.ஐ.எம். நிறுவனமும் அமைக்கப்படும் என்று ஏற்கெனவே அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
இந்த திட்டத்துக்கு பிரதமர் மன்மோகன் சிங் வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தார்.