இ‌ந்‌திய‌க் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலராக பரதன் மீண்டும் தேர்வு!

வியாழன், 27 மார்ச் 2008 (18:03 IST)
இந்திய‌க் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது‌ச் செயலராக ஏ.பி.பரதன் தொடர்ந்து நான்காவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஹைதராபா‌த்‌தி‌ல் நான்கு நா‌ட்கள் நடந்த இ‌ந்‌திய‌க் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யி‌ன் 20-வது அ‌கில இ‌ந்‌திய மாநாட்டில், 80 வயதை கடந்த ஏ.பி.பரதன் மீண்டும் கட்சியின் பொதுச் செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஆந்திர மாநிலம் நால்கொண்டா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சுதாகர் ரெட்டி கட்சியின் துணை பொதுச் செயலராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இந்த பொறுப்பு மாற்றப்பட்டுள்ளது.

புதிய ம‌த்‌திய‌க் குழு‌வி‌‌ற்கு 30 புதிய உறுப்பினர்கள் உட்பட 125 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ம‌த்‌திய‌ச் செய‌ற்குழு‌வி‌ற்கு அஜிஸ் பாஷா, சி.திவாகரன், என்.ஏ.ராஜா, பல்லாப் செங்குப்தா, மருத்துவர் காங்கோ ஆகிய ஐந்து புதிய உறுப்பினர்கள் உட்பட 31 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

தே‌சிய ‌நி‌ர்வாக‌க் குழு‌வி‌ற்கு பரதன், சுதாகர் ரெட்டி, ராஜா, குருதாஸ் குப்தா, நந்தகோபால் பட்டாச்சார்யா, சந்தரப்பன், ஷமீம் ஃபெய்சி, அடுல் குமார் அன்ஜன், அமீர்ஜித் கவுர் ஆகிய ஒன்பது பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்