கரீலா என்ற இடத்தில் உள்ள சீதா கோயிலில் நேற்று மாலை நடைபெற்ற ரங்பஞ்சமி நிகழ்ச்சியின்போது ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர். அப்போது, கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இவர்கள் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து நிகழ்விடத்துக்கு அதிகாரிகள், மாவட்ட ஆட்சித்தலைவர், காவல்துறை ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை செய்தனர்.