மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் வரும் கோட்டூர்புரம் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தை மேம்படுத்த நிதி கோரப்பட்டது. இது அருங்காட்சியகம் என்றால் அது பண்பாட்டுத் துறையின் கீழ்தான் வரும் என்று அரசு சார்பில் கூறப்பட்டது. இருந்தாலும், இத்தகைய கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட வேண்டியவை என்ற கபில்சிபல், இந்தக் கடல்சார் காட்சிக் கூடத்தின் செலவில் 70 சதவீதத்தை மத்திய அரசே ஏற்றுக் கொண்டிருக்கிறது என்றும் தெரிவித்தார்.
புதிதாக திறக்கப்பட்ட கடல்சார் அறிவியல் காட்சிக் கூடத்தில் கடல்களின் இயக்கம், அவற்றில் உள்ள அரிய வளங்கள், கடல்களால் ஏற்படும் வானிலை மாற்றங்கள், நில அடுக்குத் தட்டுகளின் நகர்வினால் ஏற்படும் சுனாமி போன்ற நிகழ்வுகள் குறித்து மாணவர்கள் விரிவாக அறிந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.