அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிதான் என்று அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார்.
இதுகுறித்து மக்களவையில் அவர் வாசித்த அறிக்கையில், "அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிதான் என்பதை சீனாவுக்கு மத்திய அரசு தெளிவாக கூறிவிட்டோம்" என்று கூறியுள்ளார்.
மேலும், "இந்திய-சீன உறவில் இரு நாட்டு சிறப்பு தூதர்களின் ஆக்கப்பூர்வமான பணிகள் பாராட்டப்பட வேண்டிய அம்சமான ஒன்று. பொது மக்களின் தேவைகளை கவனத்தில் எடுத்துக்கொண்டு அரசு நிறைவேற்றும் என்பதை தெரிவிக்கும் விதமாகவே பிரதமர் அருணாச்சல பிரதேசத்திற்கு சென்றார்" என்றும் அவர் கூறினார்.