வன்முறையைத் தூண்டுவோர் மீது கடு‌ம் நடவடிக்கை: ம‌த்‌திய அரசு!

வியாழன், 7 பிப்ரவரி 2008 (11:43 IST)
மும்பையில் வன்முறையைத் தூண்டுவோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மரா‌ட்டிய அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மும்பையில், பாதுகாப்பு தேவைப்படுபவர்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு மரா‌ட்டிஅரசை‌ககேட்டுக் கொ‌ண்டு‌ள்ளதாக‌ததெ‌ரி‌வி‌த்து‌ள்மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், மும்பை நகரில் அமைதியையும், சமூக ஒற்றுமையையும் பாதுகாக்குமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகு‌றி‌த்தஅவ‌ரவெ‌ளி‌யி‌ட்டு‌ள்அ‌றி‌க்கை‌யி‌ல், "இந்தியாவின் நிதி, தொழில் துறைகளில் மும்பை தலைநகரமாக விளங்குகிறது. நாட்டின் அனைத்து பகுதிகளை சேர்ந்த இந்திய குடிமக்களும் மரா‌ட்டிமாநிலத்தை சேர்ந்தவர்களும், மும்பை நகரை உருவாக்கியிருக்கிறார்கள். ஒன்றுபட்ட இந்தியாவின் வலிமையையும் அதன் புகழையும் பறைசாற்றும் வகையில் மும்பை நகரம் உள்ளது.

மரா‌ட்டிமாநில மக்களும் நாட்டின் அனைத்து பகுதிகளை சேர்ந்த மக்களும் இந்நகரில் வாழ்ந்து வருகின்றனர். வளமையையும் சோதனை காலத்தையும் அவர்கள் சேர்ந்தே அனுபவித்து வந்துள்ளனர். நாட்டு ஒற்றுமையின் சின்னமாக மும்பை நகரம் எப்போதுமே இருந்து வந்திருக்கிறது. எவ்வகையிலும் இது பாதிக்கப்படக் கூடாது.

எந்தவொரு நபரோ அல்லது பிரிவைச் சேர்ந்த மக்களோ மிரட்டப்படுவது, அவர்களது சொத்துக்கள் இனம் காணப்பட்டு சேதப்படுத்தப்படுவது போன்ற நிகழ்வுகள் நடைபெறாது என்பதை உறுதி செய்யுமாறு மரா‌ட்டிஅரசு கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது. இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடும் தீய சக்திகள் மீது காலதாமதமின்றி தகுந்த நடவடிக்கை எடுக்குமாறும் பாதுகாப்பு தேவைப்படுவோருக்கும், அதை கோருவோருக்கும் பாதுகாப்பு வழங்குமாறும் மரா‌ட்டிஅரசு கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

அமைதி, சமூக ஒற்றுமையை குலைப்பதற்கு மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்று நம்புகிறோம். மும்பை நகரம் வரலாறு தொட்டே, தொலைத் தூரத்தில் இருந்து மக்களை கவர்ந்து வந்துள்ளது. மும்பை நகர மக்கள் பரந்த மனப்பான்மைக்கும் விருந்தோம்பலுக்கும் பெயர் பெற்றவர்கள். நகரின் இந்த தன்மை எந்த வகையிலும் பாதிப்படைவதற்கு அனுமதி அளிக்கக்கூடாது" இ‌வ்வாறு ‌‌சிவரா‌ஜபா‌ட்டீ‌லகூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்