இரண்டாவது நிர்வாக சீர்திருத்த ஆணையத்தின் பதவி காலம் நீட்டிப்பு : பி.ஆர். தாஸ் முன்ஷி!
வியாழன், 31 ஜனவரி 2008 (14:14 IST)
இரண்டாவது நிர்வாக சீர்திருத்த ஆணையத்தின் பதவிக் காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் பிரிய ரஞ்சன் தாஸ் முன்ஷி தெரிவித்துள்ளார்.
இரண்டாவது நிர்வாக சீர்திருத்த ஆணையம் தனது அறிக்கையை வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி மத்திய அரசுக்கு சமப்ப்பிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதேப்போன்று பட்டியலிடப்படாத பழங்குடியினம், நாடோடி பழங்குடியினருக்கான தேசிய ஆணையத்தின் பதவிக் காலம் பிப்ரவரி 6 ஆம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 5 ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுஉள்ளதாகவும் பி.ஆர்.தாஸ் முன்ஷி கூறியுள்ளார். .
நிர்வாக சீர்திருத்த ஆணையம், பொது நிர்வாக முறையை முழுவதுமாக சீரமைக்கத் தேவையான நடைமுறைகளை உருவாக்க அமைக்கப்பட்டது என்றும், அதன் பரிந்துரைகளை நன்கு ஆய்வு செய்து நடைமுறைப் படுத்தும்போது தற்போதைய பொது நிர்வாக முறை மேலும் மேம்பாடு அடையும் என்று அவர் கூறியுள்ளார்.
இதுபோல பொருளாதாரத்தில் பின்தங்கிய பிற்படுத்தப்பட்டோருக்கான ஆணையத்தின் பதவிக் காலத்தையும் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் 6 மாதத்திற்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். இந்த கால நீட்டிப்பு, ஏற்கெனவே உள்ள வரையறுக்கப்பட்டு உள்ள ஆணையத்தின் சட்டத் திட்டங்களுக்கு உட்பட்டதுதான் வழங்கப்பட்டுஉள்ளதாகவும், இந்த ஆணையத்தின் நலத்திட்டங்கள் சார்ந்த பரிந்துரைகள் பொருளாதாரத்தில் பின்தங்கிய சமுகத்தினர் பயனடையவும், பல்வேறு அரசுப் பணிகளில் உரிய வாய்ப்புகளை உருவாக்கித் தரும் என்றும் பி.ஆர்.தாஸ் முன்ஷி தெரிவித்துள்ளார்.