இந்திய இளம்பெண்ணுக்கு சிறந்த அமெரிக்க குடிமகன் விருது!

புதன், 23 ஜனவரி 2008 (16:10 IST)
அமெரிக்கவாழ் இந்திய இளம்பெண் அஞ்சலி பாடியா அமெரிக்காவின் சிறந்த குடிமகன் சேவை விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இறுதிதேர்வுக்கு தகுதிபெற்ற ஆறுபேரில் அஞ்சலிக்கு முதலிடம் கிடைத்துள்ளது. நியூ ஜெர்சியில் வசிக்கும் அஞ்சலி (19) தனது 16 வயதிலேயே 'டிஸ்கவர் வேர்ல்ட்ஸ்' கண்டுபிடித்தார். இவர் அமெரிக்காவுக்கும், ருவான்டாக்கும் இடையே நல்லுறவு ஏற்படுத்தும் வகையில் தன்னார்வ அமைப்பை நடத்தி வருகிறார். வறுமையை ஒழிப்பதே அந்த அமைப்பின் முக்கிய குறுக்கோள்.

வரும் 25ம் தேதி வாஷிங்டனில் நடக்கும் விழாவில் "சிறந்த குடிமகன் சேவை தேசிய விருது' அஞ்சலிக்கு வழங்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்