2010 இல் சுற்றுலாத்துறை‌யி‌ல் 2 லட்சம் வேலைவாய்ப்புக‌ள்: அம்பிகா சோனி

வெள்ளி, 11 ஜனவரி 2008 (11:18 IST)
காமன்வெல்த் போட்டிகள் நமது நாட்டில் நட‌க்கவுள்ளதால் 2010ஆம் ஆண்டில் சுற்றுலாத் துறையில் 2 லட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று மத்திய சுற்றுலா, கலாச்சாரத்துறை அமைச்சர் ௦அம்பிகா சோனி தெரிவித்தார்.

புதுடெல்லியில் விமானப் பணிப்பெண்களுக்கான பயிற்சிப் பெறுவோரிடையே பே‌சிய அமைச்சர், 2010ஆம் ஆண்டில் நமது நாட்டிற்கு சுமார் ஒரு கோடி அயல்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப் படுவதாகவும், இதனால் சுற்றுலாத்துறை பல மடங்கு வளர்ச்சியடையும் வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறினார்.

மும்பை, டெல்லி சர்வதேச விமான நிலையங்களை நவீனப்படுத்துவது, நட்சத்திர அந்தஸ்து பெற்ற ஹோட்டல்களில் ஒன்றரை லட்சம் கூடுதல் அறைகளை உருவாக்குவது ஆகியவைதான் சுற்றுலாத்துறையும், விமானப் போக்குவரத்துத்துறையும் எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் என்று‌ம் அவர் குறிப்பிட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்