19 அன்னிய முதலீட்டு திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி!

Webdunia

வியாழன், 27 டிசம்பர் 2007 (12:03 IST)
நமது நாட்டில் ரூ.726.88 கோடி மதி‌ப்புள்ள 19 அன்னிய நேரடி முதலீட்டுத் திட்டங்களுக்கு மத்திய அரசு அனும‌தி அ‌ளி‌த்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் பரிந்துரையின் பேரில், மத்திய நிதியமைச்சர் திரு. ப. சிதம்பரம் 19 அன்னிய நேரடி முதலீட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். இத்திட்டங்களின் மதிப்பு ரூ.726.88 கோடியாகும்.

வேளாண்மை மற்றும் கூட்டுறவு, ரசாயனப் பொருட்கள், பெட்ரோ கெமிக்கல்ஸ், வர்த்தகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலம், தொழிற்கொள்கை மற்றும் மேம்பாடு, தகவல் ஒலிபரப்பு, பொருளாதார விவகாரங்கள் ஆகிய துறைகளில் அன்னிய முதலீடு மேற்கொள்ளப்படவுள்ளது.

வேளாண்மை மற்றும் கூட்டுறவு, பொருளாதார விவகாரங்கள் ஆகிய துறைகளின்தான் முக்கியமான அன்னிய நேரடி முதலீட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்