கை‌வினைஞ‌ர்களு‌க்கு ரூ.316 கோடி‌யி‌ல் ‌தி‌ட்ட‌ம் : அமை‌ச்சரவை ஒ‌ப்புத‌ல்!

வியாழன், 13 டிசம்பர் 2007 (17:07 IST)
நமது நா‌ட்டி‌ல் உ‌ள்ள கை‌வினை‌க் கலைஞ‌ர்க‌ள் தயா‌ரி‌க்கு‌ம் பொரு‌ட்களை உ‌ள்நா‌ட்டிலு‌ம், அய‌ல்நாடுக‌ளிலு‌ம் உ‌ள்ள ச‌ந்தைக‌ளி‌ல் ந‌ல்ல ‌விலை‌க்கு ‌வி‌ற்பத‌ற்கு உதவு‌ம் வகை‌யி‌ல் ரூ.316.81 கோடி ம‌தி‌ப்‌பீ‌ட்டி‌ல் உருவா‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ச‌ந்தை உத‌வி ம‌ற்று‌ம் சேவை‌த்‌ ‌தி‌ட்ட‌தி‌ற்கு ம‌த்‌திய அமை‌ச்சரவை இ‌ன்று ஒ‌ப்புத‌ல் வழ‌ங்‌கியு‌ள்ளது.

புதுடெ‌ல்‌லி‌யி‌‌ல் இ‌ன்று நட‌ந்த ம‌த்‌திய அமை‌ச்சரவை‌க் கூ‌ட்ட‌த்‌தி‌ற்கு‌ப் ‌பிறகு செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய ‌நி‌தியமை‌ச்ச‌ர் ப.‌சித‌ம்பர‌ம் இதனை‌த் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

"இ‌‌த்‌தி‌ட்ட‌த்‌தி‌ன் மூல‌ம் கை‌வினை‌க் கலைஞ‌ர்க‌ள் உருவா‌க்கு‌ம் பொரு‌ட்களு‌க்கு உ‌ரிய‌ விலை ‌கிடை‌ப்பது உறு‌‌தி செ‌ய்ய‌ப்படுவதா‌ல், அவ‌ர்களு‌க்கு முழு நேரமு‌ம் வேலை ‌கிடை‌க்கு‌ம். ‌கிராம‌ப்புற‌ங்க‌ளி‌ல் கை‌வினை‌த் தொ‌ழி‌ல் ந‌ல்ல வள‌ர்‌ச்‌சி பெறு‌ம்" எ‌ன்றா‌ர் அவ‌ர்.

இ‌ந்த‌த்‌ தி‌ட்ட‌ம், இ‌ந்த ஆ‌ண்டு தொட‌ங்‌கி அடு‌த்த 5 ஆ‌ண்டுகளு‌க்கு‌ச் செய‌ல்படு‌த்த‌ப்படு‌ம்.

வெப்துனியாவைப் படிக்கவும்