விடுதிகளுக்கான ஊக்கத் தொகை அதிகரிப்பு: சுற்றுலா அமைச்சகம்!
Webdunia
புதன், 12 டிசம்பர் 2007 (17:43 IST)
தங்கும் விடுதிகள் துறையில் முதலீட்டை அதிகரிக்கும் வகையில், கூடுதலாக கட்டப்படும் அறைகளுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகை அதிகரிக்கப்படும் என்று மத்திய சுற்றுலா அமைச்சகம் அறிவித்துள்ளது.
புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள திட்டத்தின்படி, ஒரு நட்சத்திர விடுதிகளில் கூடுதலாக கட்டப்படும் அறை ஒன்றுக்கு ரூ.2 லட்சம் வீதம் அதிகபட்சமாக ரூ.30 லட்சம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.
அதேபோல, இரண்டு நட்சத்திர விடுதிகளுக்கு அறை ஒன்றுக்கு ரூ.3 லட்சம் வீதம் அதிகபட்சமாக ரூ.75 லட்சம் வரையும், மூன்று நட்சத்திர விடுதிகளுக்கு அறை ஒன்றுக்கு ரூ. 3 லட்சம் வீதம் அதிகபட்சமாக ரூ.1 கோடி வரையும் ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.
சுற்றுலா முக்கியத்தும் வாய்ந்த பகுதிகளில் விடுதிகள் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தருவதற்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்தத் திட்டம் இந்த நிதியாண்டு முதல் அமலுக்கு வரும் என்று சுற்றுலாத்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறியுள்ளன.
நாடு முழுவதும் செல்லத்தக்க இந்தத் திட்டத்தில், பெருநகரங்களில் உள்ள விடுதிகளுக்கும் ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.