புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்திக்கு அதிக சலுகை!
Webdunia
திங்கள், 3 டிசம்பர் 2007 (18:25 IST)
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொடர்பான தொழிற்சாலைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு அதிக சலுகைகளை வழங்க மத்திய அரசு முடிவு செய்யுத்துள்ளது. அயல்நாட்ட ு, உள்நாட்டு முதலீட்டாளர்களைக் கொண்டு புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை தொடர்பான கருவிகளைத் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கான சிறப்புப் பொருளாதார மண்டலத்தை உருவாக்கும் எல்லா முயற்சிகளும் ஊக்குவிக்கப்படும் என்று மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சக இணையமைச்சர் விலாஸ் முட்டெம்வார் தெரிவித்தார். மேலும ், தமிழகம ், மராட்டியம ், கர்நாடகம ், மத்திய பிரதேசம ், சத்தீஷ்கர் ஆகிய மாநிலங்கள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை உருவாக்க ஆர்வம் காட்டியுள்ளன என்றும் அவர் கூறினார்.
செயலியில் பார்க்க x