5 மாநிலங்களில் நில நடு‌க்க‌ம்!

Webdunia

வெள்ளி, 30 நவம்பர் 2007 (18:43 IST)
மேகாலயா உள்பட இந்தியாவின் வட கிழக்கிலுள்ள 5 மாநிலங்களில் இன்று மிதமான நில நடுக்கம் ஏற்பட்டது.

மேகாலயாவின் தலைநகர் ஷில்லாங்கில் இன்று அதிகாலை 2.30 மணிக்கு 4.7 ரிக்டர் அளவுக்கு மிதமான நில நடுக்கம் ஏற்பட்டது, அதன் மையம் இந்திய மியான்மர் எல்லையில் அமைந்திருந்தது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து அஸ்ஸாம், அருணாசல பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர் ஆகிய மாநிலங்களிலும் பரவலாக நில அதிர்வுகள் உணரப்பட்டன. இவற்றின் அளவுகள் மிகக் குறைவாகவே இருந்தன என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இவற்றினால் எந்தவிதமான சேதங்களும் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்