டெல்லியில் இ‌ன்று நில நடுக்கம்!

Webdunia

திங்கள், 26 நவம்பர் 2007 (12:03 IST)
டெல்லியிலஇன்று அதிகாலை 4.42 மணியளவில் மிதமான நில நடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதி அடைந்தனர்.

டெல்லியிலும் அதன் அருகேயுள்ள உத்தரபிரதேசம், ஹரியானா மாநிலத்தின் சில பகுதிகளில் இ‌ன்று அதிகாலை 4.42 மணியளவில் நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரி‌‌‌க்ட‌ர் அளவு கோ‌ளில் 4.3 ஆக பதிவாகி உள்ளது. இந்த நில நடுக்கம் சில நொடிகள் நீடித்தது.

இதன் மையப் புள்ளி டெல்லி, ஹரியானா எல்லையில் வடக்கே 28.6 டிகிரியிலும், கிழக்கே 77.9 டிகிரியில் மையம் கொண்டு இருந்தது.

இந்த நில நடு‌க்கத்தால் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மக்கள் தங்கள் ‌வீடு ஆட்டம் காண்பதை உணர்ந்து பீதி அடைந்தனர். கடுங் குளிரையும் பொருட்படுத்தாமல் திறந்த வெளியில் வந்து குவிந்தனர்.

டெல்லியிலும், அதன் அருகேயுள்ள நோடியா ( உ.பி ) பரிதாபாத், குர்கான் (ஹரியானா) ஆகிய பகுதிகளிலும் நில நடுக்கம் உணரப்பட்டது. இதனால் உயிர் சேதம் பொருட் சேதம் ஏற்பட்டதாக இது வரை தகவல் இல்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்