செய்திகளையும், உலக நிகழ்வுகளையும் மானுட வாழ்வின் அனைத்துத் தகவல்களையும் அறிந்து கொள்வதற்கு ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டியது அவசியம் இல்லை என்று தனது இந்திய மொழிகள் இணைய பல்கலைத்தளங்களின் வாயிலாக நிரூபித்து வரும் வெப்துனியா.காம், அந்த தகவல் இந்திய மக்கள் அனைவருக்கும் சென்று சேர தொலைக்காட்சியில் சிறப்பானதொரு விளம்பரத்தை வடிவமைத்து அளித்துள்ளது.
ஆஜ் தக் எனும் இந்தி பேசும் பெரும்பாலான மக்கள் பார்க்கும் தொலைக்காட்சியில் வெப்துனியாவின் அந்த விளம்பரம் ஒளிபரப்பப்பட்டது.
தகவல்களையும், செய்திகளையும் மற்ற விவரங்களையும் தெரிந்து கொள்வதற்கான பல்கலைத் தளமாக மட்டுமின்றி, அதனைக் கண்டு பயனுறும் நீங்கள் உங்கள் கருத்துக்களை தெரிவிப்பதற்கும், நீங்கள் விரும்பியதை உங்கள் நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரிடம் மின்னஞ்சலின் வாயிலாக பகிர்ந்து கொள்வதற்கும் இந்தியாவின் 11 மொழிகளில் மின்னஞ்சல் சேவையை வெற்றிகரமாக வெப்துனியா.காம் நடத்தி வருகிறது.
தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடனம், மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி, வங்காளி ஆகிய 9 இந்திய மொழிகளில் தனித்தனியாக இணையப் பல்கலைத் தளங்களை நடத்தி வரும் வெப்துனியா, அதன் மூலம் நமது நாட்டு மக்களில் 55 விழுக்காட்டினர் தங்கள் தாய்மொழியிலேயே அனைத்தையும் அறிந்து கொள்ளவும் மின்னஞ்சல் சேவையை பயன்படுத்தவும் வகை செய்துள்ளது.
இணையவாசிகளின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் மிக விரைவில் ஒவ்வொரு பயனீட்டாளரும் தங்களுக்கென்றே தனித்த பல்கலைத் தளத்தை உருவாக்கிக் கொள்ளும் வசதியை அளிக்கப் போகிறது. அந்த வசதியை இந்திய மொழிகளில் அளிக்கும் முதல் பெருமை எமது நிறுவனத்திற்கே உரித்தாகுகிறது.
இந்த மாமுயற்சிகளிலெல்லாம் ஈடுபடுவதற்கும், அவ்வாறு ஈடுபட்ட ஒவ்வொன்றிலும் வெற்றி பெறுவதற்கும் யார் காரணம். நீங்கள் தானே! உங்களுக்கே எங்கள் சாதனை அனைத்தையும் உரித்தாக்குகின்றோம்.
ஆஜ் தக்கில் வெளியான எங்களது விளம்பரத்தைக் காணுங்கள். உங்கள் கருத்தையும் கூறுங்கள்.