ஆட்சி அமைக்க பா.ஜ.க.விற்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார்!

Webdunia

வெள்ளி, 9 நவம்பர் 2007 (20:39 IST)
கர்நாடகத்தில் நீடித்து வந்த அரசியல் நிலையற்றத் தன்மைக்கு முடிவுகட்டிடும் விதத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சட்டப் பேரவைத் தலைவர் வி.எஸ். எடியூரப்பாவை ஆட்சியமைக்க வருமாறு கர்நாடக மாநில ஆளுநர் ராமேஷ்வர் தாக்கூர் அழைப்பு விடுத்துள்ளார்!

பெங்களூருவில் ஆளுநரைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் இத்தகவலைத் தெரிவித்த முதலமைச்சராக பொறுப்பேற்கவிருக்கும் எடியூரப்பா, தனது அமைச்சரவையின் பதவியேற்பு திங்கட்கிழமை நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

அக்டோபர் மாதம் 8 ஆம் தேதி ஹெச்.டி. குமாரசாமி முதலமைச்சர் பொறுப்பில் இருந்து விலகியதையடுத்து குடியரசுத் தலைவர் ஆட்சி பிரகடனம் செய்யப்பட்டு சட்டப் பேரவை முடக்கப்பட்ட ஒரு மாதத்தில் பா.ஜ.க. - மதச்சார்பற்ற ஜனதா தளம் இடையே மீண்டும் கூட்டணி மலர்ந்ததையடுத்து இரு கட்சிகளுக்கும் இடையே 21 மாதங்களுக்கு முன்பு செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி, பாரதிய ஜனதா கட்சியின் தலைமையில் திங்கட்கிழமை கூட்டணி ஆட்சி அமைகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்