எ‌ல்லையில் இ‌ந்‌திய ‌வீர‌ர்களு‌க்கு பா‌கி‌ஸ்தா‌ன் வீரர்கள் ‌தீபாவ‌ளி வா‌ழ்‌த்து!

Webdunia

வெள்ளி, 9 நவம்பர் 2007 (18:24 IST)
தீபாவ‌ளி‌யை மு‌ன்‌னி‌ட்டு எ‌ல்லை‌ப் பகு‌திக‌ளி‌ல் ப‌ணியா‌ற்று‌ம் இ‌ந்‌திய எ‌ல்லை‌ப் பாதுகா‌ப்பு‌ப் படை ‌வீர‌ர்களு‌க்கு பா‌கி‌ஸ்தா‌ன் ‌வீர‌ர்க‌ள் இ‌னி‌ப்பு வழ‌ங்‌கி வா‌ழ்‌த்துகளை‌த் தெ‌ரி‌வி‌த்தன‌ர்.

ஒ‌வ்வொரு ஆ‌ண்டு‌ம் மு‌க்‌கிய‌ப் ப‌ண்டிகைக‌ளி‌ன் போது இ‌ந்‌திய பா‌கி‌ஸ்தா‌ன் எ‌ல்லை‌ப் பகு‌தி‌யி‌ல் ப‌ணியா‌ற்று‌ம் இருநா‌ட்டு‌ப் ‌பாதுகா‌ப்பு‌ப் படை ‌வீர‌ர்களு‌ம் ஒருவரு‌க்கொருவ‌ர் வா‌ழ்‌த்துகளை‌த் தெ‌ரி‌வி‌த்து‌க் கொ‌ள்வது வழ‌க்க‌ம்.

இ‌ந்த ஆ‌ண்டு ‌தீபாவ‌ளி ப‌ண்டிகையை மு‌ன்‌னி‌ட்டு ஜ‌ம்மு-கா‌ஷ்‌மீ‌ர் எ‌ல்லை‌‌யி‌ல் உ‌ள்ள சுசெ‌த்கா‌ர்‌க் பகு‌தி‌யி‌‌ல் ‌சிற‌ப்பு ‌நிக‌ழ்‌ச்‌சி‌க்கு ஏ‌ற்பாடு செ‌ய்ய‌ப்ப‌ட்டிரு‌ந்தது.

இ‌ந்‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌‌ல் பா‌கி‌ஸ்தா‌ன் ராணுவ அ‌திகா‌ரி ஜமா‌ல் ஷா, நமது எ‌ல்லை‌ப் பாதுகா‌ப்பு‌ப் படை கமா‌ண்ட‌ர் ‌பி.எ‌ஸ். பெ‌ய்‌ன்‌‌சிட‌ம் இ‌னி‌ப்பு வழ‌ங்‌கி வா‌ழ்‌த்து தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

''ச‌ர்வதேச எ‌ல்லை‌க் க‌ட்டு‌ப்பா‌ட்டு‌க் கோ‌ட்டு‌ப் பகு‌தி‌யி‌ல் உ‌ள்ள ப‌ல்வேறு இட‌ங்க‌ளி‌ல் ‌சிற‌ப்பு ‌நிக‌ழ்‌ச்‌சிக‌ள் நடைபெ‌ற்றன. இ‌தி‌ல் பா‌கி‌ஸ்தா‌ன் ராணுவ‌த்தை‌ச் சே‌ர்‌ந்த உயர‌திகா‌ரிக‌ள் கல‌ந்து கொ‌ண்டு நமது அ‌திகா‌ரிகளு‌க்கு வா‌ழ்‌த்துகளை‌த் தெ‌ரி‌வி‌த்தன‌ர்'' எ‌ன்று எ‌ல்லை‌ப் பாதுகா‌ப்பு‌ப் படை செ‌ய்‌தி‌த் தொட‌ர்பாள‌ர் கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்