திருமண பதிவு கட்டாயம் : உச்ச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

Webdunia

வியாழன், 25 அக்டோபர் 2007 (13:16 IST)
நாடு முழுவதும் மதவேறுபாடு இன்றி அனைத்து திருமணங்களும் பதிவுச் செய்யப்பட சட்ட பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பல்வேறு மாநிலங்களில் இந்துக்களின் திருமணத்தை மட்டும் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்துவதாகவும், மற்ற மதத்தினருக்கு இது போன்ற நெருக்கடி இல்லை எனவும் இது தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன், நீதிபதி அரிஜித் பர்சாயத் தலைமையிலான அமர்வு, அனைத்து மதங்களைச் சேர்ந்தவாகளின் திருமண பதிவை கட்டாயமாக்கத் தேவையான சட்டத்தை 3 மாதங்களுக்குள் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் கொண்டுவர உத்தரவிட்டனர்.

இது தொடர்பாக 3 மாதத்திற்குள் சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பதில் மனுத் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்