உப்கார் திரையரங்கு தீ விபத்து வழக்கு : நவ.20ல் தீர்ப்பு

Webdunia

திங்கள், 22 அக்டோபர் 2007 (16:48 IST)
கடந்த 1997ஆம் ஆண்டு தலைநகர் தில்லியில் புகழ்பெற்ற உப்கார் திரையரங்கில் ஏற்பட்ட கோரத் தீ விபத்து தொடர்பான வழக்கின் தீர்ப்பு அடுத்த மாதம் 20ஆம் தேதி வழங்கப்படுகிறது.

இந்திய சுதந்திர தினத்தின் 50வது ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடிக் கொண்டிருந்த தலைநகர் டெல்லியில் மக்களின் காதில் பேரிடியாக வந்து விழுந்தது அந்த செய்தி. புகழ்பெற்ற உப்கார் திரையரங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 59க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 100க்கும் மேற்பட்டோர் உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என்பதுதான்.

50 ஆண்டுகளைக் கடந்து 51வது ஆண்டில் நாடு அடியெடுத்து வைக்கும் போது 29க்கும் மேற்பட்ட குடும்டபங்களில் இருள் பரவத் தொடங்கியது. கடந்த 1997ஆம் ஆண்டில் கருப்பு வெள்ளிக்கிழமையாக அது மாறிப்போனது.

இச்சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் இவ்வழக்கு மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றப்பட்டது. விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கு டெல்லி பெருநகர கூடுதல் குற்றவியல் நடுவர் மன்றத்தில் நீதிபதி மம்பதா ஷெகல் முன்பு நடைபெற்று வந்தது.

திரையரங்கு உரிமையாளர்கள் சுசீல், கோபால், அன்சால் உட்பட 12 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு 115 சாட்சிகளிடம் மத்திய புலனாய்வுத் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்திய திரைப்படச் சட்டம் 1952ன் கீழ் அஜாக்கிரதையாகவும், ஆபத்தான நிலையிலும் உயிர்பலி ஏற்படும் அளவுக்கு திரையரங்கை நடத்தி வந்ததன் பேரில் அவர்கள் மீது வழக்கு பதிவுச் செய்யப்பட்டது.

இவ்வழக்கின் விசாரணை கடந்த ஆகஸ்ட் 21ம் தேத நிறைவடைந்தது. அதனையடுத்து நீதிபதி தீர்ப்பை அக்-16க்கு மேல் அறிவிப்பதாக கூறி ஒத்திவைத்தார்.

இதனிடையே, தீர்ப்பு தேதியை தெளிவாக தெரிவிக்கக் கோரி மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை விசாரித்த நீதிபதி தீர்ப்பை வரும் நவம்பர் 20ஆம் தேதிக்கு அறிவிப்பதாக நேற்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்