இடதுசா‌ரிகளுட‌ன் முர‌ண்பாடி‌ல்லை : சோ‌னியா கா‌ந்‌தி!

Webdunia

வெள்ளி, 12 அக்டோபர் 2007 (16:59 IST)
இ‌‌ந்‌திய-அமெ‌ரி‌க்க அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த ‌விவகார‌த்‌தி‌ல் இடதுசா‌ரிகளுட‌ன் எ‌ந்த‌விதமான முர‌ண்பாடும் இ‌ல்லை எ‌‌ன்று கா‌ங்‌கிர‌ஸ் தலைவ‌ர் சோ‌னியா கா‌ந்‌தி தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

புது டெ‌ல்‌லி‌யி‌ல் இ‌ன்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளேடு நட‌த்‌திய மாநாட்டில் பே‌சிய அவ‌ர், ‌''பிரதம‌ர் ம‌ன்மோக‌ன்‌ ‌சி‌‌ங் கூ‌றியதை‌ப் போல 2009ஆ‌ம் ஆ‌‌ண்டு வரை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ‌நிலை‌த்‌திரு‌க்கு‌ம். அதுவரை எ‌ல்லா‌த் ‌தி‌ட்ட‌ங்களையு‌ம் நா‌ங்க‌ள் செய‌ல்படு‌த்துவோ‌ம்'' எ‌ன்றா‌ர்.

அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த ‌விவகார‌த்‌தி‌ல் இடதுசா‌ரிகளுட‌ன் ஒரு‌மி‌த்த கரு‌த்தை உருவா‌க்க‌ அரசு முய‌ற்‌‌சி எடு‌த்துவரு‌கிற‌து எ‌ன்று‌ம் அவ‌ர் கூறினா‌ர்.

''நா‌ங்க‌ள் இ‌ன்னு‌ம் இடதுசா‌ரிகளுட‌ன் பே‌சி வரு‌கிறோ‌ம். அ‌வ‌ர்களுட‌ன் அரசு‌க்கு எ‌ந்த‌விதமான முர‌ண்பாடு‌ம் இ‌ல்லை. அது கூ‌ட்ட‌ணி த‌‌‌ர்மமாகாது.

ஒ‌ரு‌ங்‌கிணை‌‌ந்து ப‌ணியா‌‌ற்றுத‌ல், பு‌ரி‌ந்து கொ‌ள்ளுத‌ல், முய‌ற்‌சி‌‌த்த‌ல், இணை‌ந்து செய‌ல்படு‌த‌ல் ஆ‌கியவையே கூ‌ட்ட‌ணி த‌ர்ம‌ம் ஆகு‌ம்'' எ‌ன்று சோ‌னியாகா‌ந்‌தி கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்