சமையல் எரிவாயு, மண்ணெண்னை விலைகள் இப்போதைக்கு உயராது என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா கூறினார்.
மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா, மும்பையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் பெட்ரோலிய பொருட்களின் விலை அதிகரிக்கப்படாததால், எண்ணெய் நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. இதனால் அரசு வழங்கும்ட மானியம் அதிகமாகி உள்ளது. இதற்கு ஒரு தீர்வு காணப்பட வேண்டியது அவசியம்.
எனினும் சமையல் எரிவாயு, மண்ணெண்னை விலை இப்போதைக்கு உயர்த்தப்பட மாட்டாது. அதேப்போல டீசல் விலையை அதிகரிக்கவும் அரசுக்கு விருப்பமில்லை. விலையை எப்போது உயர்த்துவது என்பது குறித்து பிரதமர் மன்மோகன் சிங்தான் முடிவு செய்வார் என்று கூறினார்.