ராமர் பாலம் ஆ‌ய்வு: நிபுணர் குழு நியமனம்!

Webdunia

சனி, 29 செப்டம்பர் 2007 (10:30 IST)
ராமர் பாலத்தை இடிப்பதால் ஏ‌ற்பட‌க் கூடிய விளைவுகள் குறித்து ஆராய நிபுணர் குழு ஒ‌ன்றை மத்திய அரசு அமை‌த்து‌ள்ளது.

இ‌ந்த குழு‌வி‌ல் பல்வேறு துறைகளின் நிபுணர்களும், இத் திட்டத்தை அமுல் செய்வதில் தொடர்புள்ள அமைச்சகங்களின் பிரதிநிதிகளும் இடம்பெறுவர். எதிர்காலத்திலும் இ‌ந்த குழு‌வி‌ல் மேலும் பல நிபுணர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

சேது சமு‌த்‌திர திட்டத்தை அமுல்படு‌த்த சிறந்த வழி எது என்று இந்தக் குழு ஆராய்ந்து தெரிவிக்கும் என உய‌ர் அ‌திகா‌ரி ஒருவ‌ர் செ‌ய்‌தியா‌ள‌ர்க‌ளி‌ட‌ம் தெ‌‌ரி‌வி‌த்தா‌ர்.

மற்ற கட்சிகளை போல், ராமர் பால விவகாரத்தை அரசியல் விளையாட்டாக மாற்றாமல், தனிப்பட்ட நம்பிக்கை மற்றும் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, உறுதியான நடவடிக்கை எடுத்து இருப்பது இதன் மூலம் தெளிவாகி இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் செ‌ய்‌தி‌த் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்