புதுவையில் செப்டம்பர் 27 ஆம் தேதி உலக சுற்றுலா தினம் கொண்டாடப்படுகிறது.
புதுவை மாநில சுற்றுலா வளர்ச்சிக் கழகம், உலக சுற்றுலா தினத்தை சிறப்பாக கொண்டாட தேவையான ஏற்பபாடுகளை செய்து வருகிறது.
உலக சுற்றுலா தினத்தையொட்டி கடற்கரைகள், சுற்றுலாத் தலங்கள் ஆகியவைகளை விளக்கும் புகைப்பட போட்டி நடத்துகின்றது. இதில் புகைப்படத்தை பொழுதுபோக்காக எடுப்பவர்களும், தொழில் ரீதியாக போட்டோ எடுப்பவர்களும் கலந்து கொள்ளலாம்.
சுற்றுலாவினால் ஏற்படும் நன்மைகள் என்ற தலைப்பில் தமிழில் பேச்சு போட்டியும், கலாச்சார நிகழ்ச்சிகள், கடலில் பாதுகாப்பு நடவடிக்கைகளை விளக்குதல் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பல்வேறு மாநில சுற்றுலா வளர்ச்சிக் கழகங்கள், தங்கள் மாநிலத்தில் உள்ள சுற்றுலா மையங்களை விளக்கும் அரங்குகள் அமைக்கும் கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.