ராமர் பாலம் என்று எதுவும் இல்லை : தொல்லியல் துறை!

Webdunia

புதன், 12 செப்டம்பர் 2007 (16:36 IST)
சேது சமுத்திர திட்டப் பணிகள் நடைபெற்று வரும் ராமேஸ்வரம் கடல் பகுதியில் ராமர் பாலம் என்று கூறக்கூடிய எந்தவொரு நில அமைப்பும் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் இந்திய தொல்லியல் துறை விளக்க மனு தாக்கல் செய்துள்ளது!

சேது சமுத்திர திட்டப் பணிகள் நிறைவேற்றப்படும் இடத்தில் இந்துக்கள் நம்பும் ராமர் பாலம் என்ற தொடர் நிலத் திட்டுக்கள் உள்ளனவென்றும், அவற்றை இடிப்பதற்கு அனுமதிக்கக் கூடாது என்றும் கோரி ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி தாக்கல் செய்த மனுவிற்கு பதிலளித்து இந்திய தொல்லியல் துறை உச்ச நீதிமன்றத்தில் இன்று பதில் மனு தாக்கல் செய்தது.

ராமர் என்ற புராண பாத்திரம் வாழ்ந்ததற்கும், ராமாயணம் என்ற புராணம் நடந்ததாகக் கூறப்படுவதற்கும் வரலாற்று ரீதியாக எந்த ஆதாரமும் இல்லை என்றும், அதுபோலவே அப்பகுதியில் உள்ள நிலத் தொடர் ராமர் பாலம் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் தொல்லியல் துறை தனது விளக்க மனுவில் கூறியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்