2007 ஆம் ஆண்டு இதுவரை பெய்த மழை, வெள்ளம் காரணமாக 2,163 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது!
மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துப் பேசிய உள்துறை துணை அமைச்சர் ராதிகா செல்வி, 2007 ஆம் ஆண்டில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 22 கிராமங்களில் இதுவரை 2,163 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 90,000 கால்நடைகள் உயிரிழந்துள்ளதாகவும், 11,77,000 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 50,369 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் பீகாரில் அதிகமாக 450 பேர் உயிரிழந்துள்ளதாகவும், கேரளா (239), உத்தரப் பிரதேசம் (216), மேற்குவங்கத்தில் (212), கர்நாடகாவில் 148 பேரும் உயிரிழந்துள்ளதாக ராதிகா செல்வி கூறினார்.