ஹைதரபாத் குண்டுவெடிப்பு : மக்களவையில் விவாதம்!

Webdunia

புதன், 29 ஆகஸ்ட் 2007 (17:25 IST)
ஹைதராபாத்தில் 44 பேர் கொல்லப்பட்ட இரட்டைக் குண்டு வெடிப்பு தொடர்பாக கொண்டுவரப்பட்ட தள்ளிவைப்பு தீர்மானத்தின் மீது மக்களவையில் விவாதம் நடந்தது!

இது தொடர்பாக ஐக்கிய ஜனதா தள உறுப்பினர் பிரபுநாத் சிங் கொண்டுவந்த தள்ளிவைப்பு தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி ஒப்புதல் வழங்கினார்.

விவாதத்தை துவக்கி வைத்துப் பேசிய பிரபுநாத் சிங், பயங்கரவாதத்தை ஒடுக்க மீண்டும் பொடா சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

பயங்கரவாதிகளின் வன்முறைக்கு பலியானவர்களின் குடும்பத்திற்கு உதவ சிறப்பு நிதியம் உருவாக்க வேண்டும் என்று பிரதமர் கூறியிருப்பது தனக்கு அதிர்ச்சியளிப்பதாகக் கூறிய பிரபுநாத் சிங், பயங்கரவாதிகளையும், நக்சலைட்டுகளையும் ஒடுக்குவதற்கான கடுமையான நடவடிக்கைகள் குறித்து பிரதமர் சிந்திக்க வேண்டும் என்றார்.

ஒவ்வொரு முறையும் பயங்கரவாதிகள் தாக்குதலிற்குப் பிறகு நாடாளுமன்றத்தின் அவைகளின் உள்துறை அமைச்சர் ஷிவ்ராஜ் பட்டீல் வாசிக்கும் அறிக்கை ஒரே மாதிரியாகத்தான் உள்ளது. அதே நேரத்தில் நிலைமையில் எந்த முன்னேற்றம் ஏற்படவில்லை என்று பிரபுநாத் சிங் குற்றம் சாற்றினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்