நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மொஹம்மது அஃப்சல் குருவின் கருணை மனு மீது, குறிப்பட்ட காலத்தில் முடிவெடுக்க வேண்டும் என்ற எந்த காலக் கெடுவும் இல்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது!
மாநிலங்களவையில் பால் அப்டே, மலைச்சாமி, கோபால் வியாஸ் ஆகிய உறுப்பினர்களின் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த உள்துறை துணை அமைச்சர் ராதிகா செல்வி, இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு 72ன் கீழ் கருணை மனு மீது முடிவெடுக்க எந்தக் காலக்கெடுவும் கிடையாது என்று கூறினார்.
மொஹம்மது அஃப்சல் கருணை மனு மீது மத்திய அரசின் நிலையை குடியரசுத் தலைவருக்கு அளிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முறைப்படி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மாநிலங்களவைக்கு ராதிகா செல்வி தெரிவித்தார்.