அணு ஒப்பந்தம் அனைத்துக் கட்சிக் குழு அமைக்க முடிவு

Webdunia

செவ்வாய், 28 ஆகஸ்ட் 2007 (09:48 IST)
இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பிற்கு அனுமதி தந்து அமெரிக்க நாடாளுமன்றம் நிறைவேற்றிய ஹென்றி ஹைட் சட்டம் குறித்து முழுமையாக ஆராய அனைத்துக் கட்சி குழுவை அமைப்பது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, பாதுகாப்பு அமைச்சர் அந்தோனி, ஆகியோருடன் இடது சாரித் தலைவர்கள் நடத்தியப் பேச்சுவார்த்தையில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஆயினும் இந்த அனைத்துக் கட்சிக் குழு ஹைட் சட்டத்தை முழுமையாக ஆராய்ந்து முடிவு கூறும் வரை அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக மேற்கொண்டு எந்த நடவடிக்கையையும் மத்திய அரசு எடுக்கக் கூடாது என்று தாங்கள் கூறிவிட்டதாக செய்தியாளர்களிடம் பேசிய பார்வேர்டு பிளாக் தலைவர் தேவராஜன் கூறியுள்ளார்.

இடதுசாரிகளின் நிபந்தனை ஏற்றுக் கொள்ளப்படுமா என்பது குறித்து மத்திய அரசின் சார்பாக இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

இதற்கிடையே அணு சக்தி ஒத்துழைப்பை உறுதி செய்யும் 123 ஒப்பந்தம் குறித்து செப்டம்பர் 3 முதல் 5ஆம் தேதி வரை நாடாளுமன்றத்தில் விவாதிப்பதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்