இந்தியாவில் தற்பொழுது நிர்மாணிக்கப்பட்டு வரும் அனைத்து மின் நிலையங்களும் உற்பத்தியை துவங்கியதற்குப் பிறகு 2012ஆம் ஆண்டில் நமது நாட்டின் தேவைக்கும் அதிகமாக மின்சக்தி உற்பத்தி இருக்கும் என்று மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஷிண்டே, நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நமது எரிசக்தித் தேவையை சந்திக்க உரிய நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாகக் கூறினார்.
தற்பொழுது நிலவி வரும் மின் பற்றாக்குறை புதிதாகக் கட்டப்பட்டு வரும் மின் நிலையங்கள் உற்பத்தி துவங்கும்போது முழுமையாக நிவர்த்தியாகிவிடும் என்று கூறினார்.