விலைவாசி : ஆகஸ்ட் 29ஆம் தேதி விவாதம்

Webdunia

வெள்ளி, 24 ஆகஸ்ட் 2007 (16:29 IST)
அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு குறித்து மக்களவையில் வரும் ஆகஸ்ட் 29ஆம் தேதி விவாதம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மக்களவையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் ஒரு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மூலம் விலைவாசி உயர்வு குறித்து விவாதிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் குருதாஸ் தாஸ் குப்தா கோரிக்கை விடுத்தார்.

விலைவாசி உயர்வு பிரச்சினை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் அதனை அவை விதி எண் 193ன் கீழ் விவாதிக்கலாம் என்று அவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி யோசனை தெரிவித்தார்.

விலைவாசி தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு தன்னிடம் போதுமான விவரங்களை கொண்டு வர முடியவில்லை என்று வேளாண் துறை அமைச்சர் சரத் பவார் கூறியதை அடுத்து வரும் 21ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு விலைவாசி உயர்வு குறித்து விவாதம் நடத்த ஒப்புக் கொள்ளப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்